சொல் பொருள்
தொன்மை, பழைமை, முதுமை
சொல் பொருள் விளக்கம்
தொன்மை, பழைமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ancientness, oldness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முன்நாள் விட்ட மூது அறி சிறாஅரும் – புறம் 382/11 முன்னாள் நீ பரிசில் தந்து விட்ட தொன்முறை அறிந்த சிறுவரும் கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த படு முடை பருந்து பார்த்து இருக்கும் நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/5-8 கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர் வழியில் இருந்து தங்கி வழிச்செல்வோரைக் கொன்றதனால் உண்டான அழுகியபுலாலைப் பருந்துகள் எதிர்நோக்கி இருக்கும் நீண்ட பழைய இடங்களிலுள்ள நீர் இல்லாத வழியில் பசும்பழப் பாகல் கூதள மூது இலை கொடி நிரை தூங்க – அகம் 255/13,14 அழகிய பழத்தினையுடைய பாகற்கொடிகள் கூதாளியின் முதிய இலைகளையுடைய கொடிகளின் கூட்டத்தில்கிடந்து அசையும்படி செய்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்