Skip to content

சொல் பொருள்

மொய், சூழ்ந்திரு, மூடி

சொல் பொருள் விளக்கம்

மொய், சூழ்ந்திரு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

encircle, surround, cover

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய – பதி 42/19,20

மானத்தையுடைய வலிமை மிகுந்த வீரரோடு மன்னர்களும் புகழ்ந்து போற்ற, – உன்
தேருடன் சேர்ந்த வீரர்கள் உலகமுழுவதும் சூழ்ந்திருக்க,

சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல்
கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/13-15

அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில்
கயிறுகட்டி மேலிழுத்து நீர் முகந்த பாத்திரத்தைச் சூழ்ந்துகொண்டு மொய்த்துநிற்கும்
பசுக்கள் நிறைந்த கொங்கர் நாட்டினை வென்று சேர்த்துக்கொண்ட

பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன – குறு 233/3

பொன்னை இட்டுவைக்கும் பேழையின் மூடியைத் திறந்துவைத்ததைப் போன்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *