சொல் பொருள்
மூலை – இரண்டு பக்கங்கள் சந்திக்கும் இடத்தின் முக்கோணப் பகுதி மூலையாகும்
முடுக்கு – கோணலாய் அமைந்தது முடுக்கு எனப்படும். மிக நெருக்கமானதும் முடுக்கு எனப்படுவதுண்டு.
சொல் பொருள் விளக்கம்
தெருக்களில் ‘மூலை முடுக்கு’ உண்டு. மூலை என்பது மாரிமூலை’ ஈசானமூலை எனக் கோணத்திசைகளைக் குறிப்பதும்
உண்டு.
‘முக்கு’ என்பது முட்டித் திரும்பும் இடம். ‘முடுக்கு’ வளைந்து திரும்பும் இடம். இவை இவற்றின் வேறுபாடு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்