சொல் பொருள்
மெச்சக் கொட்டல் – பாராட்டல்
சொல் பொருள் விளக்கம்
ஒன்றைச் சொல்லும்போது அல்லது செய்யும்போது பாராட்டுவதற்கு அடையாளமாக ‘இச், இச்’ என நாவால் ஒலி எழுப்புவதை மெச்சக் கொட்டல் என்பது வழக்கு. மெச்ச – பாராட்ட; கொட்டல் – ஒலித்தல். பாராட்டுதலுக்குக் குறியாக ஒலி செய்தல் மெச்சக் கொட்டல் என்க. மெச்சக் கொட்டுதல் என்பது தின்பதற்கு இல்லாமல் வெறும் வாயை மென்று கொண்டிருப்பதாம். ‘மெச்சு மெச்செனக் கொட்டல்’ என்க. மெச்சு – ஒலிக் குறிப்பு. மெச்சு மெச்செனத் தின்னல் என்பதில் இவ்வொலிக் குறிப்புண்மை அறிக. மெச்சட்டமிடுதல் என்பதும் தின்னலே.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்