Skip to content

சொல் பொருள்

சாணம் கலந்த நீரால் பூசு, சந்தனக் குழம்பால் பூசு, எண்ணெய் அல்லது கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் உருகும் தன்மையுள்ள பொருள்,

சொல் பொருள் விளக்கம்

சாணம் கலந்த நீரால் பூசு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

smear the floor with cow-dung water, as the body with sandal paste, wax

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே – புறம் 249/14

தன் கண் கலுழ்கின்ற நீராலே சாணத்தைக் கரைத்து மெழுகிறாள்.

பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298

பசிய சாணக் கரைசலால் மெழுகிய வழிபடும் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,

நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து
திகை முழுது கமழ – பரி 10/73,74

அவர்கள் தம் முலைமுகட்டில் பூசிய சந்தனத்தின் மணம், மடைதிறந்த வெள்ளம்போல்
திசைகள் முழுதும் கமழ,

அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள்
அழுப என்ப அவன் பெண்டிர்
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே – ஐங் 32

தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
ஒரே ஒருநாள் நமது வீட்டுக்கு வந்ததற்காக, ஏழு நாட்கள்
அழுதிருந்தனர் என்று சொன்னார்கள், அவனது பரத்தைப் பெண்டிர்,
தீயில் பட்ட மெழுகைப் போல வெகு விரைவாக உள்ளம் உருகிப்போய் –

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *