Skip to content

சொல் பொருள்

விரும்பு, (மனம்) பொருந்து, இயைந்திரு,  பொருத்தமாக இரு,

சொல் பொருள் விளக்கம்

விரும்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

like, desire, be harmonious, be fitting

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கணி மேவந்தவள் அல்குல் அம் வரியே – புறம் 344/9

வேங்கைத் தாதினை விரும்பும் இளையவளுடைய அல்குலிடத்தே பரந்த அழகிய வரிகள்
– மேவருதல் – விரும்புதல் – ஔவை.சு.து.உரை விளக்கம்

இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவர
துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 135-137

துன்பம் என்பதை
அறியாத தன்மையுடையவர் மனம் பொருந்த
வெறுப்பில்லாத ஞானத்தை உடைய முனிவர்கள் முதலில் புகுந்தனர்
– ச.வே.சு.உரை

மென்தளிர்
கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர
நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி – மது 586-588

மெல்லிய தளிர்களைக்
கொழுவிய கொம்புகளினின்றும் கொய்து நீர்க்கீழ் அரும்புகளோடே பொருந்துதல் வரக் (பொருத்தமாக இருக்கும்படி) கட்டின
நெடிய தொடரையுடைய வடிம்பிலே விழும்படி உடுத்து
– பொ.வே.சோ.உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *