சொல் பொருள்
மேவ வேண்டாம், பொருந்தியிருக்க வேண்டாம், கொள்ளவேண்டாம், விருப்பம், ஆசை, பொருந்துதல்
சொல் பொருள் விளக்கம்
மேவ வேண்டாம், பொருந்தியிருக்க வேண்டாம், கொள்ளவேண்டாம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
do not be in, wish, desire, fitting
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் துனி மேவல் நல்கூர் குறுமகள் – அகம் 229/10 பெரும் வெறுப்பினைக் கொள்ளற்க, தவமிருந்த் பெற்றெடுத்த இளைய மகளே மேவல் – கொள்ளற்க, மேவற்க – இரா.செயபால் உரை (NCBH) ஊசல் மேவல் சே இழை மகளிர் – பதி 43/2 ஊஞ்சலாடுவதின் மேல் விருப்பத்தையும் கொண்ட செம்மையான இழை அணிந்த மகளிர், புரி மலர் துழாஅய் மேவல் மார்பினோய் – பரி 13/61 முறுக்குடைய மலரையுடைய துளசிமாலை பொருந்துதலையுடைய மார்பினையுடையவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்