மோதகம் என்பது கொழுக்கட்டை
1. சொல் பொருள்
(பெ) கொழுக்கட்டை, சமஸ்கிருத மொழியில் மோதகம்; பால் கொழுக்கட்டை, பூரணக் கொழுக்கட்டை
2. சொல் பொருள் விளக்கம்
கற்கண்டை இளக்கிப் பாகாக்கி, அதனைப் பூரணமாகக் கொண்டு செய்த கொழுக்கட்டைகள் மதுரைத் தெருக்களில் விற்கப்பட்டதை மதுரைக் காஞ்சி கூறுகிறது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
A bolus-like preparation of rice-flour, a sweet food item, dumpling
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 626
உள்ளீட்டோடே பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
“மோதகம்” என்ற சொல்லுக்கு “கொழுக்கட்டை” என்று பொருள் தந்ததோடு, சரியான நிழற்படங்களையும் தந்தீர்கள். புரியாதோரும் புரிந்து கொள்வர்!
நன்றிகள் பல.