சொல் பொருள்
(வினா பெ) பார்க்க : யாங்கனம்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : யாங்கனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும் செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள் இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே – நற் 184/1-5 ஒரே ஒரு மகளை உடையவள் நான்; அவளும் போர்க்களத்தில் மிக்குச் செல்லும் வலிமையையுடைய கூரிய வேலையுடைய காளையோடு பெரிய மலைகளினூடே செல்லும் அரிய வழியில் நேற்றுச் சென்றுவிட்டாள்; இப்பொழுது தாங்கிக்கொள் உன் வருத்தத்தை என்று சொல்கிறீர்! அது எவ்வாறு சாத்தியமாகும்? அறிவுள்ள மக்களே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்