வங்கூழ் என்பதன் பொருள்காற்று
1. சொல் பொருள்
(பெ) காற்று, வாதம்
2. சொல் பொருள் விளக்கம்
வங்கூழ் என்பது வேகமாக அடிக்கும் காற்று எனக்கொள்ளலாம்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம் புலவு திரை பெரும் கடல் நீர் இடை போழ இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட – அகம் 255/1-4 உலகு புடைபெயர்ந்தாலொத்த அச்சம் தரும் நாவாய் புலால் வீசும் அலைகளையுடைய பெரிய கடலின் நீரை இடையே பிளந்து செல்ல இரவும் பகலும் ஈரிடத்தும் தங்குதல் இன்றி விரைந்து செல்லும் இயற்கையினதாகிய காற்று அசைத்துச் செலுத்த வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை நன் பொன் அன்ன நறும் தாது உதிர – அகம் 378/3,4 காற்று அசைத்தலால் அழகிய தளிர்களையுடைய வேங்கை மரத்தின் பொன் போன்ற நறிய தாது உதிர்தலால் எனவே, வங்கூழ் என்பது வேகமாக அடிக்கும் காற்று எனக்கொள்ளலாம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்