சொல் பொருள்
(வி) 1. வளை, 2. வணங்கச்செய், பணியச்செய்,
சொல் பொருள் விளக்கம்
வளை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bend, make one submissive
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வன் கை கானவன் வெம் சிலை வணக்கி உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு – நற் 285/3,4 ஆற்றல் மிக்க கைகளையும் கொண்ட கானவன், தன் கடுமையான வில்லை வளைத்து, மார்பில் செலுத்தி வீழ்த்திய ஆண் முள்ளம்பன்றியோடு, புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன் – கலி 104/3,4 சோழனின் புலிச் சின்னத்தோடு, சேரனின் வில் சின்னத்தையும் நீக்கி, புகழ்மிக்க கயல் சின்னத்தை அங்குப் பொறித்து, தன் வலிமையினால் பகைவரை வணங்கச் செய்த வாட்டமுறாத தலைமைப் பண்பையுடைய பாண்டியனின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்