சொல் பொருள்
1. (பெ) 1. நிறம், 2. நிறக்கலவை, 3. அழகு, 4. இயற்கை அழகு, 5. குணம், இயல்பு, 6. இசைப்பாட்டு,
2. (இ.சொ) வகையில் விதத்தில்,
ஒருவர் உடல் பருத்துத் தோற்றப் பொலிவு அடைதல் வண்ணம்
சொல் பொருள் விளக்கம்
ஒருவர் உடல் பருத்துத் தோற்றப் பொலிவு அடைதலை வண்ணம் என்பது விளவங்கோடு வட்டார வழக் காகும். கோட்டுப் படத்திற்கும் வண்ணந்தீட்டிய படத்திற்கும் உள்ள நிலையை ஒப்பிட்டுக் காணலாம்.
வேர்ச்சொல்லியல்
இது varnish என்னும் ஆங்கில சொல்லின் மூலம்
இது வர்ணம் என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
colour, paint, beauty, Unadorned, natural beauty, Nature, character, quality, song, in the manner of, as indicated
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வண்ண ஒண் தழை நுடங்க வால் இழை ஒண் நுதல் அரிவை பண்ணை பாய்ந்து என – ஐங் 73/1,2 நிறமமைந்த ஒளியையுடைய தழையுடை அசையும்படி, தூய அணிகலன்களையும் ஒளிபொருந்திய நெற்றியையும் உடைய தலைவி, நீர்விளையாட்டு ஆடினபோது வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள் – புறம் 32/3 நிறமுடைய கலவை பூசப்பட்ட வளைந்த சந்தினையுடைய முன்கையினையும் மா மலர் வண்ணம் இழந்த கண்ணும் – அகம் 197/1 கரிய குவளை மலரின் அழகினை இழந்த கண்களும் பிறை நுதல் வண்ணம் ஆகின்று – புறம் 1/9 பிறை திருநுதற்கு அழகாயது மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும் தேசும் ஒளியும் திகழ நோக்கி – பரி 12/20,21 அழுக்கு நீங்க கண்ணாடியைப் பளபளப்பாக்கி, அதில் தம் இயற்கையழகும், செயற்கையழகும், மேனியெழிலும் தோன்ற, அவற்றைக் கண்டு மகிழ்ந்து வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை – குறி 31,32 (தலைவன்)குணத்தையும் கூட்டாளிகளையும் (நம்மவருடன்)ஒப்பிட்டுப்பார்த்தும், யோசித்துப்பாராமல், நாங்களாக(வே) துணிந்துசெய்த (தலைவிக்கு)ஆபத்தற்ற (இந்த)சிறப்பான செயல் பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும் மண் முழா அமைமின் பண் யாழ் நிறுமின் – புறம் 152/13,14 யான் பாடுவேன் விறலியே ஒரு இசைப்பாட்டு, நீங்களும் முழாவின்கண்ணே மார்ச்சனையை இடுமின், யாழிலே பண்னை நிறுத்துமின் கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும் வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ – குறி 30-34 (நாமாக)மணந்தால் நன்கு அமையுமோ என்பதையும்,(தலைவனின்)குடும்பம் ஒத்ததாக இருக்குமோ என்பதையும், (தலைவன்)குணத்தையும் கூட்டாளிகளையும் (நம்மவருடன்)ஒப்பிட்டுப்பார்த்தும், யோசித்துப்பாராமல், நாங்களாக(வே) துணிந்துசெய்த (தலைவிக்கு)ஆபத்தற்ற (இந்த)சிறப்பான செயல் (முன்பு)நடந்தவிதத்தை நீ முழுதும் நன்றாகப் புரிந்துகொள்ளும்படியாக சொல்லுதல் மேற்கொண்டேன், (அது கேட்டுக்)கோபிக்கவேண்டாம் –
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு மூலச்சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்