சொல் பொருள்
(வி) வணங்கு,
சொல் பொருள் விளக்கம்
வணங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
salute reverentially
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிந்திக்க தீரும் பிணியாள் செறேற்க மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை வந்திக்க வார் என மன தக்க நோய் இது வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு போற்றாய் காண் அன்னை புரையோய் புரை இன்று மாற்றாளை மாற்றாள் வரவு – பரி 20/68-73 “இவள் பெயரைச் சிந்தித்தாலேயே தீர்ந்துவிடும் பாவப்பிணிகள், அப்படிப்பட்டவள் மீது சினங்கொள்ளாதே, பேதைமைகொண்டாய் கொடிய சொல்கூறி, இந்த இளம் மயில்போன்ற சாயல் உடையவளை வணங்க வருவாயாக” என்று சொல்ல, என்றும் நீங்காத துன்பமாகிவிட்டதே என்று எண்ணிய பரத்தை, “வேற்றவரை வேற்றவர் தொழுவதென்பது இழிவு தருவதாகும், அறியமாட்டாயோ? அன்னையே! பெரியவளே! பெருமைக்குரியதல்ல மாற்றாளை மாற்றாள் வழிபடுவது” என்று சொல்ல,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்