Skip to content

வந்தீத்தந்தாய்

சொல் பொருள்

(வி) வந்தாய்,

சொல் பொருள் விளக்கம்

வந்தாய்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(where do you) come (from)?

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல்
பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை
சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் – கலி 96/1-4

“உயர்ந்த அழகினையுடைய மார்பனே! உன் வாய்ச்சொல்லுக்கு எதிர்ப்பேச்சு இல்லை,
பாய்த்துக்கட்டிய அழகிய வேட்டி கழன்று கிடக்கும் அழகோடு நிற்கிறாய்!
சந்தனமெல்லாம் அழிந்துகிடக்கிறது வியர்வையால்! தலைமாலை தோள்வரை தொங்குகிறது!
எங்கு சென்றுவிட்டு இங்கு வந்தாய்?”
வந்தீத்தந்தாய் – வினைத்திரிசொல்; வந்தாய் என்றவாறு – நச்.உரை, பொ.வே.சோ விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *