சொல் பொருள்
(பெ) தலைவியைத் தலைவன்/தோழி ஆற்றி வற்புறுத்துகை,
சொல் பொருள் விளக்கம்
தலைவியைத் தலைவன்/தோழி ஆற்றி வற்புறுத்துகை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Assurance, comfort, given to a lady by her lover or friend
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்றே வருவர் ஆன்றிகம் பனி என வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் நின் வலித்து அமைகுவன் மன்னோ – அகம் 74/12-14 இன்றே நம் தலைவர் வந்துவிடுவார் நாம் நடுக்கத்தை அமைவேம் என்று கூறும் வன்புறையாகிய பல இனிய நல்ல சொற்களைக் கூறிவரும் நின் சொல்லைத்துணிந்து அமைந்திருப்பேன், அது மாட்டுகிலேன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்