Skip to content

சொல் பொருள்

(பெ) 1. முல்லை நிலம், 2. வலிய நிலம் 3. மேட்டுநிலம்,

சொல் பொருள் விளக்கம்

முல்லை நிலம், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

jungle tract, pastoral tract, hard soil, elevated land, high land

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை
அரி புகு பொழுதின் இரியல் போகி
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும்
வன்புலம் இறந்த பின்றை மென் தோல் – பெரும் 201-206

வளைவாக, விதைத்தவாறே, உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை,
(கதிர்களை)அறுப்பதற்குச் செல்லும்போது, (ஆட்களின் அரவத்தால்)நிலைகெட்டு ஓடி,
(வெண்மையான)நிறத்தையுடைய கடம்பின் நறிய பூவை ஒத்த
வளரும் இளமையான (தம்)குஞ்சுப்பறவைகளைத் அணைத்தவாறு, குறிய காலினையும்,
கரிய கழுத்தினையும் உடைய காடைப்பறவை காட்டில் தங்கும்
வன்புலமான முல்லைநிலத்தைக் கடந்த பின்பு

நெல் மிக்கு
அறை_உறு கரும்பின் தீம் சேற்று யாணர்
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை
வன்புலம் தழீஇ – பதி 75/5-8

நெல் மிகுதியாய் விளைய,
வெட்டப்பட்ட கரும்பின் இனிய சாறாகிய புதுவருவாயினை
வருவோர்க்கு அளவின்றிக் கொடுக்கும் செல்வம் பெருகியிருக்கும் குடியிருப்புகள்
வன்புலத் தன்மை பெற்று,

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வன்புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏற்ப- புறம் 173/5-7

காலம் தப்பாத மழை பெய்யும் காலத்தைப் பார்த்து
தம் முட்டைகளைக் கொண்டு மேட்டுநிலத்தினை அடையும்
மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய ஒழுக்கத்தை ஒப்ப

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “வன்புலம்”

  1. Sivakumar Ramakrishnan

    மிக அருமையான தமிழ்த் தொண்டு. தங்களின் இப்பணி சங்கத்தமிழ் ஆய்வுக்கு பெரும் துணை செய்கிறது ஐயா. மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *