சொல் பொருள்
(பெ) புதியவர், வழிப்போக்கர்,
சொல் பொருள் விளக்கம்
புதியவர், வழிப்போக்கர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Newcomer, stranger Wayfarer
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் – அகம் 15/6 பொருள் இன்றி வரும் புதியவர்களைப் புரக்கும் நற்பண்பினையுடைய கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர் துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின் – கலி 4/4,5 கவர்ந்து கொள்ளக்கூடிய பொருள் இல்லாதவரெனினும், அவ்வழி வரும் புதியவர் துடித்து வருந்துவதைக் கண்டு மகிழ்வதற்காக, அவரை விரட்டி அவரின் உயிரைக் கவர்வதால், ஆறு செல் வம்பலர் காய் பசி தீர சோறு அடு குழிசி – பெரும் 365,366 வழிச்செல்கின்ற புதியோருடைய மிக்க பசி தீரும்படி (அவர்)சோற்றை ஆக்குகின்ற பானை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்