Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வலிமை, திறன், 2. மிகுதி, 3. வயா நோய், பிரசவ வலி,

சொல் பொருள் விளக்கம்

வலிமை, திறன், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

strength, power, increase, abundance, Pains of child-birth

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வய களிறு பார்க்கும் வய புலி போல – மது 643

வலிய களிற்றை(இரையாக)ப் பார்க்கும் வலிய புலியைப் போல,

சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை
வய தணிந்து ஏகு – பரி 11/39,40

நெடுந்தொலைவைக் கடந்து மலைகளில் ஊர்ந்துவந்த சிறப்புமிக்க அணிகலன்களை அணிந்த வையையே!
மிகுதியும் தணிந்து செல்வாயாக!

இந்த இடத்திலும் வய – வலி(மை) என்றே பொருள்கொள்வார் பொ.வே.சோ. அவர்கள்.
ஆசிரியர் பரிமேலழகர் வய என்றதற்கு மிகுதி என்று பொருள் கூறினர். வய என்பதற்கு மிகுதி என்னும் பொருள்
உளதாயினும் கொள்க என்று அவர் கூறுகிறார்.

கல் அயல் கலித்த கரும் கால் வேங்கை
அலங்கல் அம் தொடலை அன்ன குருளை
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி
புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டு – நற் 383/1-4

மலையடிவாரத்தில் செழித்து வளர்ந்த கரிய அடிப்பகுதியையுடைய வேங்கைமரத்து மலரின்
அசைகின்ற அழகிய மாலையைப் போன்ற குட்டிகளை ஈன்ற
பிரசவ வலியால் வாடிய ஈன்றணிமையான பெரிய பெண்புலிக்குப் பசித்ததாக, வலிய ஆண்புலி
புள்ளிகளையுடைய முகம் உருக்குலைந்துபோகத் தாக்கிக் களிற்றினைக் கொன்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *