சொல் பொருள்
1. (வி.மு) வருந்தவேண்டாம்,
2. (பெ) வருத்தம் கொள்ளுதல்,
சொல் பொருள் விளக்கம்
வருந்தவேண்டாம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
do not be grieved
grieving
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனை வருந்தல் வாழி தோழி – நற் 88/1,2 நாம் என்றோ செய்த அந்தப் பழைய செயலுக்காக ஏன் கலக்கமுறுகின்றாய்? வருந்தவேண்டாம்! வாழ்க தோழியே! கடும் பரி நெடும் தேர் கால் வல் புரவி நெடும் கொடி முல்லையொடு தளவ மலர் உதிர விரையுபு கடைஇ நாம் செல்லின் நிரை வளை முன்கை வருந்தலோ இலளே – ஐங் 422 விரைந்த ஓட்டத்தையுடைய, நெடிய தேரில் பூட்டப்பட்ட, கால்கள் வலிதான குதிரையை, நீண்ட கொடியையுடைய முல்லையுடன் தளவ மலர்களும் உதிர்ந்து விழுமாறு வேகமாகச் செலுத்தி நாம் சென்றால், வரிசையாக அடுக்கப்பட்ட வளையல்களையுடைய முன்னங்கையையுடையவள் வருத்தம் தீர்வாள்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்