Skip to content

சொல் பொருள்

(பெ) வரைவுகொள்ளுதல், தடைசெய்யல், தடுத்தல்,

சொல் பொருள் விளக்கம்

வரைவுகொள்ளுதல், தடைசெய்யல், தடுத்தல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

forbidding

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோள் அறியா சொன்றி
நிரை கோல் குறும்_தொடி தந்தை ஊரே – குறு 233/4-7

பெரியவர்களுக்கு
நீருடன் சொரிந்து மிஞ்சிய பொருளையும், எல்லாருக்கும்
வரையறுத்துக்கொள்ளுதலை அறியாத சோற்றினையும் உடைய
வரிசைப்பட்ட திரண்ட குறிய வளையலையுடையவளின் தந்தையின் ஊர்

உண்மரும் தின்மரும் வரைகோள் அறியாது
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு
அடை சேம்பு எழுந்த ஆடு_உறும் மடாவின்
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும்
கண்டு மதி மருளும் வாடா சொன்றி – பதி 24/18-22

உண்பாரும், தின்பாருமாய் வரைவுகொள்வதை அறியாது உண்டும்
ஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை இருக்கும் இடங்கள்தோறும்
இலையையுடைய சேம்பினைப் போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும்,
வாளால் இறைச்சியை வெட்டும்போது சிவந்துபோன வெட்டுமரத்தையும் யாவரும்
கண்டு வியக்கும் – குறையாத சோறு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *