சொல் பொருள்
(பெ) 1. அளவு, 2. மணம்புரிதல்,
சொல் பொருள் விளக்கம்
அளவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
measure, extent, marrying
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரை சால் நன் கலம் வரைவு இல வீசி – பதி 54/8 புகழ்ந்துரைக்கும்படியான நல்ல அணிகலன்களை அளவில்லாமல் வழங்கி நுதலும் தோளும் திதலை அல்குலும் வண்ணமும் வனப்பும் வரியும் வாட வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி வரைவு நன்று என்னாது அகலினும் – அகம் 119/1-4 நெற்றியும் தோளும் தேமலையுடைய அல்குலும் நிறமும் அழகும் வரியும் வாட இவள் வருந்துவாள் என நன்கு ஆராய்ந்துணர்ந்து மணந்துகொள்ளல் தக்கது என்னாது பிரிந்திடினும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்