சொல் பொருள்
(பெ) 1. உலர்ந்துபோதல், 2. வறட்சி, 3. வறண்ட நிலம், 4. காய்ந்த சிறுகுசி, சுள்ளி,
சொல் பொருள் விளக்கம்
உலர்ந்துபோதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
drying up, drought, parched land, dried twig
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் – சிறு 163 உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்: அருவி அற்ற பெரு வறல் காலையும் – பதி 28/9 அருவிகள் வற்றிப்போன பெரும் வறட்சியான காலத்திலும் எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய் – கலி 13/2 நெருப்பு பரவலாய்ச் சுட்டதினால் கரியாகி வறண்டு போன நிலத்தில் பசித்த வாய்க்குப் பச்சை இலை கிடைக்காதவையாய் ஆழ் நீர் அறு கய மருங்கில் சிறு கோல் வெண் கிடை என்றூழ் வாடு வறல் போல நன்றும் நொய்தால் அம்ம – புறம் 75/7-10 தாழ்ந்த நீரையுடைய வற்றிய கயத்திடத்து சிறிய தண்டாகிய வெளிய நெட்டியின் கோடைக்கண் உலர்ந்த சுள்ளியைப் போலப் பெரிதும் நொய்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்