சொல் பொருள்
(பெ.அ) பார்க்க : வறு
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : வறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dried up, empty, bare, empty receptacle, bare hand
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வறும் – வறு – வறிய – வற்றிப்போன, dried up உணீஇய மண்டி படி முழம் ஊன்றிய நெடு நல் யானை கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை – அகம் 119/17-19 நீர் உண்டற்கு விரைந்து சென்று மண்ணில் முழங்காலை மடித்து ஊன்றிய நெடிய நல்ல யானையானது தனது கையால் தோய்த்தும் நீர் இன்மையால் பெருமூச்செறியும் வறிய சுனையினையுடைய வறும் – வறு – வறிய – வெறுமையான – empty, bare உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 267 நெல் இல்லாமற்போன வெறுமையான நெற்கூட்டின் உட்புறத்தில் தங்கி, வளைந்த அலகையுடைய கூகை உச்சிக்காலத்து(ம்) கூவவும்; வறும் கூடு – empty receptacle (container for grains) விறலியர் வறும் கை குறும் தொடி செறிப்ப – மது 218 விறலியரின் வெறுமையான கைகளில் குறிய வளைகளைச் செறித்துச்சேர்க்க, வறும் கை – bare hand
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்