Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வெற்றி, 2. வலிமை, 3. வலது கை, 4. வலப்பக்கம், 5. வலமாகச் சுற்றிவருதல், 6. திறமை,

சொல் பொருள் விளக்கம்

வெற்றி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Victory, triumph, Strength, power, right hand, right side, clockwise direction, Circumambulation from left to right, skill, ability, efficiency

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 59,60

அவுணரின் நல்ல வெற்றி இல்லையாகும்படி, கீழ்நோக்கின பூங்கொத்துக்களையுடைய
மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும்,

வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த – புறம் 24/29

சிறந்த வாட்போராலே வாழ்வோர் நினது முயற்சியின் வலிமையை வாழ்த்த

பறை வலம் தப்பிய பைதல் நாரை – குறு 125/5

சிறகுகளின் வலிமையை இழந்த வருத்தமுடைய நாரை

பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய – பரி 1/55

பொன்னால் செய்யப்பட்ட அழகிய சக்கரப்படையை வலது கையில் தாங்கிக்கொண்டவனாய்

தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி – அகம் 357/4

பெரிய கொம்பினையுடைய யானையை வலப்பக்கத்தே விழக் கொன்று

வலம் சுரி தோகை ஞாளி மகிழும் – அகம் 122/8

வலப்பக்கம் சுரிதலையுடைய வாலினையுடைய நாய் குரைக்கும்

வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு – அகம் 304/9

வலமாகத் திரிந்த கொம்பினையுடைய தலைமையுடைய கலைமானொடு

புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க_வழி எல்லாம் கூறு – கலி 82/4,5

தேவர்களின் கோவிலை வலமாகச் சுற்றிவந்து பின்னர் என் மகனாகிய இவனோடு
நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக”;

ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் – கலி 69/5

வேதம் ஓதுதலையுடைய அந்தணன் தீயினை வலம் வருவதைப் போல

செல்க தேரே நல் வலம் பெறுந – அகம் 374/16

ஓடட்டும் தேர், நல்ல திறன் வாய்ந்த பாகனே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *