Skip to content

சொல் பொருள்

(பெ) செய்ய/நடக்க முடியாதவை, 2. (பெ.அ) செய்ய முடியாத, 

சொல் பொருள் விளக்கம்

செய்ய/நடக்க முடியாதவை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

impossibilities, incapable of doing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே
செறிவும் சேண் இகந்தன்றே அறிவே
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே
வல்லா கூறி இருக்கும் – குறு 219/1-5

பசலைநோய் என் மேனியில் இருக்கிறது; விருப்பமோ
தலைவருடைய அன்பில்லாத நெஞ்சமெனும் அடையமுடியாத இடத்தில் உள்ளது.
என் பெண்மை அடக்கமோ என்னைவிட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டது; என் அறிவும்
தலைவர் இருக்குமிடம் செல்வோம், எழுக என்று, இங்கு
நடக்காததைச் சொல்லிக்கொண்டு என்னுடன் இருக்கும்

இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல் – அகம் 53/13-15

இல்லாதவர்களுக்கு இல்லையென்று கூறி அவரைப் போலிருந்து மறைத்தலைச்
செய்ய மாட்டாத நெஞ்சம் வற்புறுத்தலால், நம்மைக்காட்டிலும்
பொருளே காதலரின் விருப்பம்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *