சொல் பொருள்
(பெ) வளம், பெருக்கம்,
சொல் பொருள் விளக்கம்
வளம், பெருக்கம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
abundance, increase
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும் புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும் நின் உருபுடன் உண்டி பிறர் உடம்படுவாரா நின்னொடு புரைய அந்தணர் காணும் வரவு – பரி 2/61-68 வேதங்களில் தேர்ந்த ஆசானின் மந்திரமொழிகளும், படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்லும் வேள்விச்சாலையில் யாகபலிக்காக ஆடுகளைக் கொண்டுபோவதும், புகழ் பொருந்த இசைக்கும் வேதவிதிகளின்படி யாகத்தீயை முறையாக மூட்டி, திகழும் ஒளியையுடைய பிரகாசமான சுடரினது பெருக்கத்தைச் செய்துகொள்வதும், ஆகிய இம்மூன்று செயல்களும் முறையே, உன் உருவமும், உன் உணவும், பிறரும் ஏற்றுக்கொள்ளும்படியான உனது பெருமைக்குப் பொருந்தும்படி அந்தணர்கள் போற்றிக் காணும் உன்னுடைய தோற்றப்பொலிவின் சிறப்பும் ஆகும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்