சொல் பொருள்
(பெ) சூழப்பட்ட இடம்,
சொல் பொருள் விளக்கம்
சூழப்பட்ட இடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enclosed place, surrounded place
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் – புறம் 189/1,2 தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற வேந்தர்க்குப் பொதுவாதலின்றி தமக்கே உரித்தாக ஆண்டு வெண்கொற்றக்குடையால் நிழல்செய்த ஒரு தன்மையை உடையோர்க்கும் திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம் – கலி 146/28 அலைகளைக் கொணரும் கடல் சூழ்ந்த இம் மண்ணுலகம் எங்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்