சொல் பொருள்
(வி) 1. புழங்கு, நடமாடு, இயங்கு, 2. நடைமுறையில் இரு, பயன்பாட்டில் இரு, 3. கூறு, சொல், 4. கொடு, 5. பக்கவாட்டில் அசை, மேலும் கீழும் அசை, 6. இயங்குநிலையில் இரு, 7. உலவு, 8. ஊர், ஏறு, ஏறிச்செல்,
2. (பெ) வழங்குதல்
சொல் பொருள் விளக்கம்
புழங்கு, நடமாடு, இயங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
keep in use, move about, be in use, utter, say, give, swing, move up and down, be operative, function, walk about, mount, ride (as a horse), giving
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு வழங்கு அதர கானத்து அல்கி – பொரு 49 யானைகள் நடமாடும் வழிகளை உடைய காட்டிடத்தே தங்கி, தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக – மது 648 தேர்கள் புழங்கும் தெருவில் நீர் திரண்டு ஒழுகும்படி வருநர்க்கு வரையாது பொலம் கலம் தெளிர்ப்ப —————– —————————— கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே – பதி 18/3-6 வருவோர்க்கு வரையாது வழங்குதற்பொருட்டு நீவிர் அணிந்துள்ள பொற்றொடிகள் ஒலிக்க ——————— ————————— வரிசைபெறும் தகுதி வாய்ந்த விறலியரே! – புழங்குங்கள் அடுப்புகளை – அடுப்பு வழங்குக என்றது இடையறவின்றிச் சமைத்தவண்ணமே இருக்க என்றவாறு – ஔவை.ச்சு.து.விளக்கம் கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி – குறு 207/5 பாறைகளின் அருகே உள்ளது நீண்ட நாட்களாய் புழக்கத்திலிருக்கும் சிறிய வழியில் வண்டு பட ததைந்த கொடி இணர் இடை இடுபு பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் கதுப்பின் தோன்றும் புது பூ கொன்றை கானம் கார் என கூறினும் யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே – குறு 21 வண்டுகள் மொய்ப்பதால் மலர்ந்த நீண்ட கொத்துக்கள் (தழைகளினிடையே) விட்டுவிட்டு, பொன்னால் செய்யப்பட்ட தலைச்சுட்டி போன்ற அணிகள் அணிந்த பெண்களின் கூந்தலைப்போல் தோன்றும் புதிய பூக்களையுடைய கொன்றை மரமுள்ள (இந்த) நந்தவனம் (இது) கார்ப்பருவம் என்று தெரிவித்தாலும் நான் ஏற்கமாட்டேன்; அவர் பொய் சொல்லமாட்டார். நீர் நாண நெய் வழங்கியும் எண் நாண பல வேட்டும் – புறம் 166/21,22 நீர் நாணும் அளவுக்கு நெய்யினைக் கொடுத்தும் எண்ணிக்கை நாணும் அளவுக்குப் பல வேள்விகளை வேட்டும் பெரும் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என – நற் 146/6,7 பெரிதும் குளிர்ச்சியையுடைய மரத்தின் நிழலில் சிறிது நேரம் இறங்கியிருந்து தங்கிச் செல்வாயாக! அருள் வழங்கட்டும் சூரியன் என்று மைந்து மலைந்த மழ களிறு கந்து சேர்பு நிலைஇ வழங்க – புறம் 22/8,9 வலிமை மிக்க இளங் களிறு கம்பத்தைப் பொருந்தித் தான் நின்ற நிலையிலேயே நின்று பக்கவாட்டில் அசைய நீர் தெவ்வு நிரை தொழுவர் பாடு சிலம்பும் இசை ஏற்றத் தோடு வழங்கும் அகல் ஆம்பியின் கயன் அகைய வயல் நிறைக்கும் மென் தொடை வன் கிழாஅர் – மது 89-93 நீரினை முகக்கும் (ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள் பாடுதலால் ஒலிக்கும் இசையும், ஏற்றத்(தோடு) (ஏற்றத்)தோடு மேலும் கீழும் இயங்கும் அகன்ற (நீரிறைக்கும்)சாலின் ஓசையும், குளத்தின் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய(நீரை முகந்து) வயலை நிறைக்கின்ற மென்மையான கட்டுக்களையுடைய வன்மையான ஏற்றப்பொறியின் ஓசையும் ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் ————————— ————————– அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் கடவுள் வழங்கும் கையறு கங்குலும் அச்சம் அறியாது ஏமம் ஆகிய மற்றை யாமம் – மது 647-653 ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்; ———————————- —————————— சோம்பலற்றவராய்ப் புறப்பட்டு நியதி உணர்வு தோன்ற சுற்றிவருதலால், தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும் அச்சத்தை அறியாமல் காவலையுடைய முந்திய யாமத்தை குதிரை வழங்கி வருவல் – கலி 96/6 குதிரை ஏறி வருவேன் – நச்.உரை குதிரை ஏற்றம் பயின்று வருகிறேன் – பொ.வே.சோ விளக்கம் குதிரை ஊர்ந்து வந்தேன் – ம.இரா. உரை வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப – புறம் 382/15 வறுமையின் நீங்கி, பிறர்க்கும் யாம் வழங்குதல் அமைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்