Skip to content

சொல் பொருள்

(பெ.எ) 1. வழுவாத, விலகாத, நெறிபிறழாத, 2. வழுவாத, தவறாத,

சொல் பொருள் விளக்கம்

1. வழுவாத, விலகாத, நெறிபிறழாத,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

not falling off, not going astray

unfailing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே – திரு 95,96

ஒரு முகம்
மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத
அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும்

பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர்
குழு மலை விடரகம் உடையவால் எனவே – குறி 259-261

பேயும், மலைப்பாம்பும், (இவற்றை)உள்ளிட்ட பிறவும்,
(நாம் சிறிது)தவறினாலும் (அவை உடனே கொல்லத்)தவறாத இடர்ப்பாடுகளை — (அவரின்
கூட்டமான மலைகளில் உள்ள பிளவுகள் உள்ள இடம்) — உடையன’

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *