Skip to content

சொல் பொருள்

(வி.எ) 1. வழுவாமல், நெறிபிறழாமல், 2. வழுவாமல், தவறாமல்,

சொல் பொருள் விளக்கம்

வழுவாமல், நெறிபிறழாமல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

without erring, without going astray

unfailingly

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறை_வயின் வழாஅது நின் சூலினரே – பரி 5/46,47

குற்றமற்ற கற்பினையுடைய அந்த முனிவர்களின் மனைவியர்
தம் கற்பினில் வழுவாமல் உன்னைக் கருக்கொண்டனர்;

இரும் பறை இரவல சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாது
வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே
———————- ———————–
வில் உமிழ் கடும் கணை மூழ்க
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே – புறம் 263/2-8

பெரிய பறையினையுடைய இரவலனே! நீ போகின்றாயாயின்
தொழாதவனாய்க் கடந்து செல்லுதலைத் தவிர்ப்பாயாக, (தொழுது சென்றால்) இடைவிடாமல்
வண்டுகள் மேம்பட்டு வாழும் இந்தக் கொடிய வழி;
——————- ——————
வில் உமிழ்ந்த விரைந்த அம்புகளில் மூழ்கி
கரையைக் கொல்லும் புனலின் அணை போல எதிர்நின்று விலக்கியவனின் நடுகல்லை,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *