சொல் பொருள்
வழிக்குவராமை – ஒருவர் செயலில் குறுக்கிடாமை
சொல் பொருள் விளக்கம்
வழிக்கு வருதல், நெறிப்படல், ஒழுங்குறல் என்னும் பொருள. அவ்வழிக்கு வராதவனைப் பார்த்து ‘எங்கள் வழிக்கு நீ வராதே’ என ஒதுக்கி விடுவது வழக்காம். இவண் வழிக்கு வருதல் என்பது அவர்கள் செயல்களில் பங்குகொள்ளல்,ஊடாடுதல் என்பனவாம். “வழியே ஏகுக; வழியே மீளுக” என்பது வழியறிந்தோர் வழி. இவ்வழி கெட்டோர் வழி. வழியை அழிப்பதே. எப்படி இணையும் இருவர் வழியும்? ஆதலால்; “வழிக்கு வராதே” என விலக்குதலே தற்காப்பாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்