சொல் பொருள்
வழுக்குதல் – ஒழுக்கம் தவறல்
சொல் பொருள் விளக்கம்
வழுக்கி விழுதல் என்பதும் அது. ‘வழுக்கி விழுந்தவள்’ எனப் பெண்ணைப் பழிக்கும் ஆணுலகம் – ஏன் பெண்ணுலகமும் கூட, ஆணை வழுக்கி விழுந்தவனாகச் சொல்வது இல்லை. வழுக்கி விழுந்தவர்கள் கடைத்தேறவென்றே அரும்பாடுபட்டார் முத்துலக்குமி அம்மையார். காந்தியடிகள் தம் தொண்டில் ஒரு பகுதி வழுக்கி விழுந்தவர் கடைத்தேற்றத்திற்கு உரிமை கொண்டது. ஒருவர் வழுக்கினால், இன்னொருவரும் வழுக்குதலுக்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டுமே! அவரைத் தப்பவிட்ட வழுக்குதலே வழுக்குதலாம். “அவள் வழுக்கி விழுந்தவளாமே” எனப் பார்வை பார்ப்பது பரிவாக இருந்தால் நலம்! எரிவாக இருந்தால்? எய்தவன் இருக்க அம்பை நோவதாம் பழியே. வழுக்கி விழுதல், வழிதவறல், கைவிடல் என்பனவும் இச்சார்புடையனவே
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்