சொல் பொருள்
(பெ) வழு, இழிசொல்,
சொல் பொருள் விளக்கம்
வழு, இழிசொல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
words of ill-repute
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண் இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர் வழூஉ சொல் கோவலர் தத்தம் இன நிரை பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் – கலி 106/1-5 பசுவின் தலையில் கட்டும் கழியும், சூட்டுக்கோலும் வைத்துக் கட்டிய தோல்பையையும், ஒன்றோடொன்று கயிற்றினால் கட்டப்பட்ட மண்கலங்களைக் கொண்ட உறியையும் தூக்கிக்கொண்டு நீண்டிருக்கிற கொன்றைப் பழத்தில் செய்யப்பட்ட இனிய குழலை வாசித்துக்கொண்டவராய், கொச்சையான பேச்சுக்களைப் பேசும் கோவலர்கள் தத்தம் மாட்டுக்கூட்டங்களை, நேரத்தில் வந்த கார் காலத்தில் தோன்றின மழையில் நனைந்த அகன்ற புல்வெளிக்குக் கொண்டுசென்றனர்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்