சொல் பொருள்
(பெ) 1. மெலிவித்தல், 2. அழித்தல்,
சொல் பொருள் விளக்கம்
மெலிவித்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
causing to grow thin or weak, emaciating, destroying
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ் குறைபடூஉம் வாயில் அத்தை – புறம் 196/4-7 தனக்கு இயலாததனை இயலும் என்றலும், இயலும் பொருளை இல்லை என்று மறுத்தலுமாகிய இரண்டும், விரைய இரப்போரை மெலிவித்தல்;அன்றியும் ஈவோர் புகழ் குறைபடும் வழியாம் செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு உறுமிடத்து உய்க்கும் உதவி ஆண்மையும் இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி – அகம் 231/1-3 தம் பகைவர் செருக்கினை ஒழித்தலும், தம்மைச் சேர்ந்தோர்க்கு ஓர் ஊறு எய்துமிடத்து உதவி செய்தலாய ஆண்மையும் இல்லின்கண்ணெ வாளாவிருந்து மடியாலமைந்திருப்போர்க்கு இல்லை என்று எண்ணி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்