சொல் பொருள்
வாயாடி – ஓயாப்பேசி
சொல் பொருள் விளக்கம்
வாயாடுதல் உண்ணுதலுக்கும் ஆம் ஆயினும் அதனைக் குறியாமல் பேசுதல் பொருளில் வழங்குவது வழக்குச் சொல்லாம். ஓயாமல் பேசுபவரை வாயாடி என்பதும் பெரிய வாயாடி என்பதும் வழக்கம். குழந்தை நிலையில் வாயாடி என்பது பெருமையாகப் பெற்றோராலும் மற்றோராலும் புகழப்படும். ஆனால் சற்றே வயதாகிவிட்டால் குறையாகவும், பழியாகவும் ஆகிவிடும். குழந்தைப் பருவத்திற்கு ஒரு தனிச் சிறப்பு. செய்யும் குறைகளுக்கும் தனிமதிப்பு. ‘வாயாடல், என்பதினும், இழிவும் கொடுமையும் உடையது கையாடல். கையாடலால் தலையெடுத்து வாழ்ந்தவரும் உண்டு; தலை மறைவானவரும் உண்டு. முற்றாகத் தலைமறைந்தவரும் இல்லாமல் இல்லை.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்