சொல் பொருள்
வாயைக்கட்டுதல் – பல்சுவைப் பண்டங்களைக் குறைத்தல்;
சொல் பொருள் விளக்கம்
மானம் கருதாது அடங்கியிருத்தல். வயிற்றைக் கட்டுதல், சோற்றுப் பஞ்சத்தின் பாற்பட்டது. வாயைக் கட்டுதல் சோற்றளவுக்கு வாய்ப்பு இருந்தாலும் சுவை சுவையான பண்டங்கள் குடிநீர்கள் ஆயவற்றைக் கருதாமல் அடக்கி வாழ்வதாம். வயிறு வயிற்றுப் பசியையும், வாய்,நாச்சுவையையும் குறிப்பன எனலாம். இனித் தங்கள் சூழ்நிலை குடும்ப நிலை கருதி மானக்கேடான சொல்லை ஒருவர் சொல்லும்போதும் அடக்கிக் கொண்டு இருந்துவிடல் உண்டு. மறுமொழி சொல்ல உணர்ச்சியுண்டாகியும் அடக்கிக் கொள்ளுதல் வாயைக் கட்டுதல் எனப்படுவதாம். “வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி இருந்தாலும் நினைத்துப் பார்க்கிறீர்களா?” என்பதோர் ஏசலுரை. ‘நாயின் வாயைக் கட்டுதல்’ என்பது ‘குரையாது ஆக்கல்’ என்னும் கருவினையாகச் சொல்லப்படுவதும் அறிக.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்