சொல் பொருள்
வால் – கமலை வடத்தொடு கூடிய கயிறு அல்லது வால் கயிறு.
தோல் – வால்கயிற்றுடன் கூடிய தோல் அல்லது வால் தோல்
சொல் பொருள் விளக்கம்
வால் முன்னே வரும்; தோல் பின்னே வரும். வால் பத்தலை அடைந்ததும் தோல் நீரைக் கொட்டும். வால் வரவும் தோல் வரவும் நிகழ்ச்சி ஒன்றையொன்று தழுவி நிகழும். அதுபோல் இணைந்து பேசி செயல்படுவாரை ‘வாலும் தோலும்’ என்பது உண்டு. ஒருவருக்கு ஒருவர் ஏற்றுப் பேச வந்தால் நீ என்ன அவனுக்கு “ வாலா? தோலா?” என வினாவுவதும் வழக்கம். வேறு; வகையாக வாலைக் கண்டாயா? தோலைக் கண்டாயா? என்பதும் வழக்காம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்