சொல் பொருள்
(பெ) 1. வெண்மை, 2. தூய்மை, 3. முகுதி, பெருக்கம்,
வால் – குரங்குத்தனம்
சொல் பொருள் விளக்கம்
விலங்குகளின் பொது உறுப்பு வால்; ஊர்வனவற்றுள்ளும் பல, வால் உடையன. வால் என்பது நீண்டிருப்பதால் நெடுமைப் பொருளும் உண்டாயிற்று. ‘வாலி’ நீண்டு ஒடுங்கிய நிலம். வாலம் நெடுங்கிழிவு ‘இனி இவ்வால் வாலைக் குறியாமல்,வாலுடைய எல்லாவற்றையும் குறியாமல்’ குரங்கு வாலையே குறித்து நின்று, பின்னர் அதன் குறும்புச் செயலைக் குறிப்பதாக வளர்ந்தது. அந்நிலையில் வால் என்பது ‘குரங்குத்தனம்’ எனப்பட்டதாம். “நீ செய்கிற குறும்புத் தனத்திற்கு எல்லை இல்லை” என்றும் “உனக்கு வால் மட்டும் தானே இல்லை” என்றும் வருவன அறிக.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
whiteness, purity, plentitude, abundance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120 கொம்பு மிக்கு ஒலிப்பவும், வெள்ளிய சங்கு முழங்கவும் வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள் – நற் 76/5 வருந்தாது வருவாயாக, தூய அணிகலன்களை அணிந்த இளமங்கையே! வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 115 மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்.
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்