சொல் பொருள்
(வி.அ) பேசாமல், அமைதியாக,
சொல் பொருள் விளக்கம்
பேசாமல், அமைதியாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
silently, quietly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறலினாள் மாற்றாள் மகள் வாய் வாளா நின்றாள் செறி நகை சித்தம் திகைத்து – பரி 20/45-47 மறுத்துப் பேசினாள் அந்த மாற்றாளாகிய பெண்; வாய்பேச முடியாமல் நின்றாள், செறிவான பற்களைக் கொண்ட தலைவி, அதைக் கேட்டு சித்தம் திகைத்து; இல் எலி வல்சி வல் வாய் கூகை கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும் வளை கண் சேவல் வாளாது மடியின் மனை செறி கோழி மாண் குரலியம்பும் – அகம் 122/13-16 இல்லிலுள்ள எலியை இரையாகக் கொண்ட வலிய வாயினதாகிய கூகையின் சேவல் பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவுண்டாகக் குழறும் பொந்தில் வாழும் அச் சேவல் வறிதே உறங்கின் மனையில் தங்கிய கோழிச்சேவல் மாண்புற்ற குரலை எழுப்பிக் கூவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்