சொல் பொருள்
(பெ) 1. போரில் பயன்படும் நீண்ட கத்தி, 2. கத்தரிக்கோல், 3. அரிவாள், 4. ஒளி, விளக்கம், 5. கூர்மை,
சொல் பொருள் விளக்கம்
1. போரில் பயன்படும் நீண்ட கத்தி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sword, scissors, sickle, brightness, splendour, sharpness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46 இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி – கலி 36/23 கத்தரிக்கோலால் ஒழுங்காக வெட்டிவிடப்பட்ட, ஒளிவிடும் நெய்ப்புள்ள கூந்தல் செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உற – நற் 275/1 செந்நெல்லின் கதிர் அறுப்போரின் கூரிய அரிவாளால் காயப்பட்டு மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 31 மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின் வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன – அகம் 24/1,2 வேள்வி செய்யாத பார்ப்பான் கூரிய அரத்தால் துண்டாக்கி எடுத்த வளையல்கள் போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற – ந.மு.வே.நாட்டார் உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்