சொல் பொருள்
(வி) 1. வசி, 2. உயிரோடிரு, 3. இரு
சொல் பொருள் விளக்கம்
வசி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
live, dwell, live, be alive, exist, be
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன – பொரு 9 வளையில் வாழ்கின்ற நண்டின் கண்னைக் கண்டது போன்ற வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை – பெரும் 126 உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சூழ்ந்த காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும் வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – நற் 314/2 உயிரோடிருக்கும் நாளை வகுத்து இன்ன அளவுள்ளது என்னும் அறிபவரும் இங்கு இல்லை; அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 304 (ஆற்று மணல் போல் அலை அலையான)நெறிப்பு உள்ள மயிரினையுடைய (மலை)இடைச்சியர் பாடலோசையும் கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – மலை 555,556 வேகமாகப் பாயும் வெள்ளத்தையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின் கருமணல் இருக்கும் மணல்மேடுகளிலுள்ள மணலினும் பலரே உண்கண் மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என் – நற் 184/6,7 மையுண்ட கண்களின் மணிகளில் இருக்கும் பாவையானது வெளியில் வந்து நடக்கக் கற்றுக்கொண்டதைப் போல என்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்