சொல் பொருள்
வாழ்க்கைப்படல் – மணம் செய்தல், மனைவியாதல்
சொல் பொருள் விளக்கம்
திருமணத்தை ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ என்பது புது வழக்கு. ‘வாழ்க்கைத் துணை “என மனைவியைத் திருக்குறள் கூறும். அதன் வழிவந்த படைப்பு அது, “உனக்கு வாழ்க்கைப் படுகிறேன்” என்று முதிய பெண்கள் சிறு குழந்தைகளிடம் விளையாட்டாகக் கேட்பதும் உண்டு. “உனக்கு வாழ்க்கைப் பட்டு வந்து என்ன கண்டேன்” என்று ஏக்கம் தெரிவிப்பாரும் உண்டு. வாழ்க்கைப் படுதல் என்பது மனைவியாதல் என்னும் பொருளதாம். கணவன் உனக்கு வாழ்க்கைப் படுகிறேன் என்னும் வழக்கு – இல்லை. உன்னைக் கட்டிக் கொள்கிறேன் என்பதே வழக்கு. வாழ்க்கை என்பது பொதுமை நீங்கி மணவாழ்வைக் குறிப்பதால் வழக்குச் சொல்லாயிற்றாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்