Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வாழ்வோர், 2. வாழும் வழியாகக் கொண்டவர், 3. ஒன்றனைச் சார்ந்து இருப்பவர்,

சொல் பொருள் விளக்கம்

வாழ்வோர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

residents, inhabitants, those who live by something, those who live depending on something/somebody

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான் – கலி 39/14,15

தினைப் புனங்களும் கதிர்களை வளைத்து ஈனமாட்டா! இந்த மலைவாழ் மக்கள்
இவளுடைய காதலை மறுக்கும் அறமில்லாத செயல்களைச் செய்து நடப்பதால்!

ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் – புறம் 33/4

ஏரால் உழுதுண்டு வாழ்பவரது பெரிய மனையின் மகளிர்

என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது – புறம் 72/10

எனது ஆட்சியின்கீழ் வாழ்வார் தாங்கள் சென்றடையும் புகலிடம் காணாமல்

தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப – புறம் 161/30

உன் ஆதரவில் வாழ்வோர் நல்ல ஆபரணத்தை மிகுப்ப

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *