சொல் பொருள்
(வி) 1. இறுகக்கட்டு, 2. புடை, விம்மு,
2. (பெ) இறுக்கம், இறுக்கமாகக் கட்டுதல்
சொல் பொருள் விளக்கம்
இறுகக்கட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fasten tightly, become swollen, over-stretched, as the abdomen from over-eating, tightening
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின் விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து திண் வார் விசித்த முழவொடு – மலை 1-3 கருக்கொண்ட மேகங்கள் ஒன்றுகூடிய கருமை நிறங்கொண்ட பரந்த வானில் விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப் போன்று, தாளங்களைத் தட்டிப்பார்த்து, உறுதியான வாரால் இறுகக் கட்டிய மத்தளத்துடன் பழன வாளை பரூஉ கண் துணியல் புது நெல் வெண் சோற்று கண்ணுறையாக விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி – புறம் 61/4-6 பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய தடியை புதிய நெல்லினது வெள்ளிய சோற்றுக்கு மேலீடாகக் கொண்டு விலாப்புடைப்பக்கம் விம்ம உண்டு (இங்கேயும் விசித்தல் – இறுக்கமாதல் – என்ற பொருள் குறிப்பால் உணர்த்தப்படுதலைக் காண்க) வள் வார் விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/2,3 வளம்பொருந்திய வாரினால் இறுகப் பிணித்துக் கட்டிய அடிக்கும் கோலினையுடைய தெளிந்த ஒலியினதாகிய கிணைப்பறையின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்