சொல் பொருள்
(பெ) 1. நிலப்பிளப்பு, 2. மலை வெடிப்பு, 3. மலைச்சரிவில் ஏற்பட்ட பிளப்பினால் ஆகிய குகை,
சொல் பொருள் விளக்கம்
நிலப்பிளப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fissure, cleft, crevice, gap in mountain slope, cave in a mountain slope
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை கோள் மறந்த கரு விரல் மந்தி அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி சிறுமையுற்ற களையா பூசல் – மலை 311-314 (குட்டியைக்)கையில் பிடிப்பதை மறந்த கரிய விரலையுடைய மந்தி, எளிதாய் அணுகமுடியாத பிளவுக்குள் விழுந்துவிட்ட தன் (தாவுதலை முற்றிலும்)கற்றுக்கொள்ளாத குட்டிக்காக தளிர்களை மேய்ந்து (வளர்ந்த) உடம்பினையுடைய சுற்றத்தோடே கூடிநின்று துன்பப்பட்ட (யாராலும்)களையமுடியாத பெரிய அமளியும்; கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து அமை கண் விடு நொடி கண கலை அகற்றும் – அகம் 47/5-7 சூறாவளி வெப்பமுறச் செய்த, பக்கங்களில் நீண்டும், கூரான கொழுந்துவிட்டும் எரியும் நெருப்பு பிளவுகளும் குகைகளும் கொண்ட மலைச் சரிவில் பரந்து விரிதலால், அதனுடன் சேர்ந்து, மூங்கில் கணுக்கள் வெடித்தலால் எழும் ஒலி மான் கூட்டத்தை விரட்டும் குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் பெரும் கல் விடர் அளை செறிய – திரு 313,314 கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி பெரும் பாறைகளின் வெடிப்பாகிய முழைஞ்சிலே சேர, விடர் முகை செறிந்த வெம் சின இரும் புலி – நற் 158/5 மலையின் பிளப்புகளிலுள்ள குகையில் பதுங்கியிருக்கும் மிக்க சினமுள்ள பெரிய புலி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்