சொல் பொருள்
விடுத்தான் – குழந்தையைக் குறிக்கும் பெயர்
சொல் பொருள் விளக்கம்
திண்டுக்கல் வட்டாரத்தில் விடுத்தான் என்பது குழந்தையைக் குறிக்கும் பெயராக வழங்குகின்றது. விடுத்தான் என்பதால் முதற்கண் ஆணைக் குறித்துத் தோன்றிப் பின்னர்ப் பொதுமை பெற்றிருக்கும். பெற்றோர்களுக்குச் செய்யும் கடமைகளைச் செய்து விடுக்கும் பிள்ளை என்னும் கருத்தில் எழுந்தது போலும். கொள்ளிக்குப் பிள்ளை என்பது, பிள்ளைக்கோ பெற்றோர்க்கோ பெருமை தாராச் செய்தி. மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிய மக்களைக் கருமக் கூண்டில் அடைத்த வழக்கு வழியது இது.
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்