சொல் பொருள்
(பெ) 1. அமைக்கும் முறை, 2. நியதி, 3. காசிபன்
சொல் பொருள் விளக்கம்
அமைக்கும் முறை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
direction, recipe, rule, kasyapa
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல – பரி 7/20 விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவன் செய்த மேனிப் பூச்சுக்குரிய கலவையைப் போல, அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள விதி கூட்டிய இய மென் நடை போல – பரி 10/24,25 அதிரும் குரலையுடைய, இசைவல்லுநர்கள் ஆக்கிய தாள விதியால் கூட்டப்பட்ட, பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் மென்மையான நடையில் சென்றாற்போல ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே – திரு 94-96 ஒரு முகம் மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும் திதியின் சிறாரும் விதியின் மக்களும் – பரி 3/6 திதியின் சிறுவர்களாகிய அசுரர்களும், விதியின் மக்களாகிய சூரியன் பன்னிருவரும், – பதினொரு பிரமர்களுள் ஒருவனாகிய காசிபன் ஈண்டு விதி எனப்பட்டான்; ஆதித்தர் பன்னிருவர் காசிபன் மக்கள் என்பது புராணக்கதை – பொ.வே.சோ உரை விளக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்