சொல் பொருள்
(பெ) தொழில்வல்லோர்,
சொல் பொருள் விளக்கம்
தொழில்வல்லோர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Workers; artisans, artificers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் தொழில் வினைஞர் கைவினை முற்றி ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு – சிறு 257,258 வன் தொழில் செய்யும் தச்சரின் செயல்திறம் நிறைந்து, ஏறிப் பார்த்து (நல்லதெனக்கண்ட)பெயர்பெற்ற, அழகிய நடையை உடைய தேரோடு கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 210-212 கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில், (தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர் முடி(யாக வீசிய)நாற்றை அழுத்தி நட்ட நீண்டநாள் நிற்கும் நீரையுடைய வயலில் நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக – மது 539 அகன்ற இடத்தையுடைய (பிறநாட்டு)வணிகர் (இங்குச் செய்த)அணிகலன்களை (வாங்கி)எடுத்துச்செல்ல, நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் மீன் முதிர் இலஞ்சி – அகம் 186/2,3 வலிய தூண்டிற்கயிற்றினையுடைய மீன்பிடிப்போர், மீன் இரை கோத்த முள்ளினைப் பற்றியதை உணர்ந்து இழுக்கும் மீன் மிக்க நீர்நிலையில் ஓவியர்கள் கண்ணுள்வினைஞர் எனப்படுகிறார். எ வகை செய்தியும் உவமம் காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி – மது 516-518 பல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக் கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய ஓவியரும், பிறரும் கூடி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்