Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பெருமை, 2. அகலம், பரப்பு,  3. மிகுதி,

சொல் பொருள் விளக்கம்

பெருமை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

greatness, width, extension, abundance

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி – புறம் 256/5

பெரிய பரப்பினையுடைய அகலிய பூமியிடத்துக் காட்டின்கண் முதுமக்கள்தாழியை

விழவு நின்ற வியல் மறுகின் – மது 328

விழாக்கோலம் நிலைபெற்ற அகன்ற தெருவினையும்,

அகல் நகர் வியல் முற்றத்து – பட் 20

அகன்ற மனையின் பரந்த முற்றத்தில்

வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை – அகம் 364/10

கொடிய சினத்தினையுடைய அரசனது மிகப்பெரிய பாசறைக்கண்ணே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *