சொல் பொருள்
விரல் வைத்தல் – தலையிடுதல், தொடுதல், எச்சரித்தல்
சொல் பொருள் விளக்கம்
“என்னைத் தொடு பார்க்கலாம்” என ஓட்டப் பந்தயம் ஓடுவது விளையாட்டு. “என்னைத் தொடு பார்க்கலாம்; உயிரோடு திரும்பி விடுவாயோ?” “என்பது வினையாட்டு. சீற்றம் மிக்க பொழுதில் ‘விரலை வை’ என்றோ ‘தொடு’ என்றோ சொன்னால், ‘நீ தொலைந்தாய்’ என்னும் எச்சரிக்கையாம். எச்சரிக்கைப்படுத்துதற்கு ஒரு விரலை நீட்டுதலும், நீட்டி ஆட்டுதலும் காணுங்கால் விரல் வைத்தல் என்பதன் பொருள் விளக்கமாம். உதட்டின் மேல் விரல் வைத்தால் பேசாதே என்னும் எச்சரிக்கையாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்